ரத்தக்காட்டேரி பீதி: பாக்கெட்டில் வெள்ளைப் பூண்டுடன் சுற்றும் கிராமத்தினர்

மேற்கு செர்பியாவில் மலை குன்றுகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய கிராமம் ஜரோஜீ. அந்த கிராமத்தில் ரத்தக்காட்டேரி ஒன்று உலாவி வருவதாக மக்கள் நம்புகின்றனர். இதையடுத்து ரத்தக்காட்டேரியிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்திருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செர்பியாவில் கூறப்படும் சவா சவானோவிக் என்னும் ரத்தகாட்டேரி வெறும் கட்டுக் கதை என்பது மக்களுக்கு தெரிந்தும் அதை நம்ப மறுக்கின்றனர். ஒரு வேளை ரத்தக்காட்டேரி நிஜமாகவே இருந்து எங்களை பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுகின்றனர்.
இதனால் அனைவரும் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள ஓக் மர காடுகளுக்கு நடுவே இருந்த மில்லில் தானியங்களை அரைக்க வந்தவர்களின் ரத்தத்தை சவானோவிக் குடித்துவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரத்தால் ஆன அந்த மில் இடிந்து விழுந்தது. இதனால் சவானோவிக் வேறு இடம் தேடி அலைவதாக கிராமத்தினர் நம்புகின்றனர்.
ரத்தக்காட்டேரி காட்டில் நடக்கும் சத்தம் கூட கேட்பதாக கிராமத்தினர் சிலர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications