அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு- வாக்கெடுப்பு பற்றி 'அப்போது' முடிவு: மாயாவதி அதிரடி
டெல்லி: அன்னிய நேரடி முதலீட்டை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும் இது தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாடு மேற்கொள்வது என்பதை அப்போது முடிவு செய்யப் போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
சில்லறை வர்த்தகத்தி அன்னிய நேரடி முதலீட்டுக்கான விவகாரத்தில் தம்மை ஆதரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக் கொண்டிருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் இப்போது அந்தர்பல்டி அடித்திருக்கிறது.
லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது விவசாயிகளை, வர்த்தகர்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியது. இதில் இருக்கக் கூடிய ஒரே நல்ல அம்சம்.. மாநிலங்களைக் கட்டாயப்படுத்தாததுதான். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேண்டுமானால் இதனை முதலில் நடைமுறைப்படுத்திவிட்டு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்கலாம்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது எங்களது நிலையை முடிவு செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரம் மீது மக்களவையில் நாளை மற்றும் நாளை மறு நாள் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெறக் கூடிய நிலையில் மாயாவதியின் இந்த அறிவிப்பால் ஆடிப் போய்க் கிடக்கிறது மன்மோகன்சிங் அரசு!












Click it and Unblock the Notifications