"ஈழத் தமிழகம்" அமையாது போனதற்கு காரணம் தமிழர் ஒற்றுமையின்மையே- கருணாநிதி

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பேசுகையில்,
பெரியாருக்கு பின்னர் அவரது 'சொத்து'களையும், கொள்கைகளையும் வீரமணி பாதுகாத்து வருகிறார். 1949-ம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் நடந்த தி.மு.க. அறிமுக கூட்டத்தில் பேசிய அண்ணா, இந்த இயக்கம் பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் எதிரானது அல்ல. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இயங்கும் என்றார்.
அழகிரிக்கு கட்டாய கல்யாணம்
திராவிடம் என்பதை வீழ்த்தியே தீருவோம், அந்த வார்த்தை எங்கள் சாதிக்கு விரோதமாக உள்ளது என்கின்றனர். என் மகன் அழகிரி ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று தகவல் அனுப்பினான். ஆனால் காந்தி என்கின்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை திட்டமிட்டு திருமணம் செய்து வைத்தேன்.
ஈழத் தமிழரும் திமுகவும்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 1961-ம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இப்போது ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம்.
ஈழத் தமிழகம்
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடிய போதே ஈழத்தமிழகம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஈழத்தமிழகம் கிடைக்கவில்லை. எனவே ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட டெசோ அமைப்பு முயற்சித்து வருகிறது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications