காருக்குள் உட்கார்ந்து பேசிய காதல் ஜோடியிடம் பணம் பறித்த எஸ்.ஐ. கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு உள்ளுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி, அவர்களிடமிருந்து ஏடிஎம் கார்டைப் பறித்து அதிலிருந்து ரூ. 50,000 பணம் எடுத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரையும், அவருடன் வந்த ஊர்க்காலப் படையைச் சேர்ந்தவரையும் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

ரெட்டி என்பவர் சென்னை அருகே பெரும்பாக்கம் பகுதியில் இரவில் சாலையோரம் தனது காரை நிறுத்தி விட்டு தனது காதலியுடன் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பள்ளிக்கரணை சப் இன்ஸ்பெக்டர் சங்கரன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் ரோந்து வந்தனர். காரைப் பார்த்து இறங்கிய அவர்கள் உள்ளே இருந்த ரெட்டியிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ரெட்டி,நாங்கள் காதலர்கள், விரைவில் திருமணம் ஆகப் போகிறது. எனது காதலி அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். அவரை டிராப் செய்தேன், வந்த இடத்தில் பேசிக் கொண்டிருந்தேன் என்றார்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சப் இன்ஸ்பெக்டர் சங்கரன், ரெட்டியிடமிருந்த ஏடிஎம் கார்டைப் பறிமுதல் செய்தார். பின்னர் அதிலிருந்து ரூ. 50,000 பணம் எடுத்துள்ளார். இந்த சமயத்தில் அங்கு வந்த இன்னொரு சப் இன்ஸ்பெக்டரான விமலானந்தன் என்பவர் சங்கரன் பறித்த பணத்தை வாங்கி ரெட்டியிடம் திருப்பிக் கொடுத்தார். மேலும் சங்கரனையும் இதுபோல செய்ய வேண்டாம் என்று கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் கமிஷனர் ஜார்ஜ் காதுகளுக்குப் போனது. உடனடியாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சங்கரனும், ஞானசேகரனும் நடந்து கொண்ட விதம் உண்மைதான் என்று தெரிய வந்தது. அதேசமயம், ரெட்டியும் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்களைக் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி சங்கரன், ஞானசேகரன் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+