சென்னை மாநகராட்சி கழிவறையில் ஆண் பிணம்: தூக்கில் அழுகிய நிலையில்...
சென்னை: சென்னை மாநகராட்சி வளாகத்தில் இயங்கி வரும் கனரா வங்கி கட்டடத்தின் மாடியில் உள்ள கழிவறையில், அழுகிய நிலையில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியபடி கிடந்தது.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் போர்ட் ரூம் என்று அழைக்கப்படும் கட்டிடம் உள்ளது. இதில் தற்போது கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மாடியில் கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் அழுகி கிடந்தது.
வெள்ளிக்கிழமையே அவர் தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 2 நாட்கள் விடுமுறை என்பதால் யாரும் இதை கவனிக்கவில்லை.
மாநகராட்சி அருகே மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. எனவே பிணமாக தொங்கியவர் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளியாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications