1000 ரூபாய்க்காக 11 வயது மகளை 76 வயது தாத்தாவிடம் அனுப்பிய பெற்றோர்!
லண்டன்: வெறும் 1046 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக தங்களது 11 வயது மகளை ஓய்வூதியம் வாங்கி வரும் ஒரு 76 வயது முதியவரிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள அனுப்பி வைத்துள்ளனர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெற்றோர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்பெயினில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த சிறுமிக்கு 11 வயதுதான் ஆகியிருந்தது. தற்போது அந்த பெற்றோரையும், முதியவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தங்களது மகளை அந்த தாத்தாவிடம் விபச்சாரப் பெண் என்று கூறி பெற்றோர் அனுப்பியதுதான் கொடுமையிலும் பெரிய கொடுமை. மஜோர்கா என்ற ஸ்பெயின் தீவில் வைத்து அந்த பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது அநத் சிறுமிக்கு 15 வயதாகிறது.
சிறுமியுடன் ஐந்து ஆண்டு காலத்திற்கு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்த முதியவருடன் பெற்றோர் ஒப்பந்தம் வேறு செய்துள்ளனராம்.
இந்த ஒப்பந்தப்படி, விடுமுறைக்காக என்று கூறி அந்த பெற்றோர் தங்களது மகளுடன் முதியவரைத் தேடி வந்துள்ளனர். அங்கு சிறுமியை உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒரு விதமான பணத்தை வாங்கிக் கொண்டு மகளை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தபோது அறையில் அடைத்து வைத்து சரமாரியாக அடிக்கவும் செய்துள்ளனர்.
தற்போது பெற்றோர் மற்றும் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.












Click it and Unblock the Notifications