மாநிலங்களவையை முடக்கிய காங்கிரஸின் 'பங்காளி கட்சிகள்'
Subscribe to Oneindia Tamil

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதை சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்ப அவையில் அமளி ஏற்பட்டது.
அமளியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் அவை நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை கூடிய போதும் தொடர்ந்து அமளி நிலவியதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுமே மாநிலங்களவையை முடக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications