ராமதாஸுக்கு எதிராக திரளும் அரசியல் தலைவர்கள்.. மீண்டும் தனித்து விடப்படுமா பாமக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் ஜாதியை கையில் எடுத்துள்ள டாக்டர் ராமதாஸுக்கு ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தலித்களுக்கு எதிரான ராமதாஸின் சமீபத்திய எதிர்ப்பு நிலை அரசியல் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீ்ண்டும் அரசியல் கட்சிகளால் 'தீண்டத்தகாத' கட்சியாக பாமக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

80களில் வலுவான வன்னியர் சங்கம்

80களில் வலுவான வன்னியர் சங்கம்

1980ம்ஆண்டு வன்னியர் சங்கம் என்ற ஜாதி அமைப்பைத் தொடங்கினார் டாக்டர் ராமதாஸ். இந்த சங்கத்தின் மூலம் வட மாவட்ட வன்னிய சமுதாயத்தினரின் ஏகோபித்த தலைவராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். அவரது செயல்பாடுகள், போராட்ட உத்திகளால் கவரப்பட்ட வன்னிய சமுதாயத்தினர் டாக்டர் ராமதாஸ் பின்னால் திரண்டு நிற்க ஆரம்பித்தனர்.

9 வருட ஜாதி அரசியல்

9 வருட ஜாதி அரசியல்

1989ம் ஆண்டு வரை வன்னியர் சங்கமாகவே செயல்பட்டு வந்த டாக்டர் ராமதாஸ், ஜாதிப் பெயரில் அரசியல் கட்சியாக செயல்பட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறையால் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை 89ம் ஆண்டு உருவாக்கினார்.

5 தேர்தல்களில் தனித்துப் போட்டி

5 தேர்தல்களில் தனித்துப் போட்டி

பாமக உருவான பின்னர் 1989ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்டு 15.36 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதன் பின்னர் 1996 வரை மொத்தம் 5 தேர்தல்களில் பாமக தனியாகப் போட்டியிட்டு தான் ஒரு பலமான ஜாதிய கட்சி என்பதை நிரூபித்தது.

ஏற்றம் கொடுத்த அதிமுக

ஏற்றம் கொடுத்த அதிமுக

அதன் பின்னர் 1998 லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்தது பாமக. அக்கட்சிக்கு 4 தொகுதிகளை அதிமுக கொடுத்தது. அன்று முதல் கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலையும் பாமக சந்தித்ததில்லை.

மாறி மாறி கூட்டணி

மாறி மாறி கூட்டணி

1998 தேர்தலுக்குப் பின்னர் பாமகவின் முகம் மாறத் தொடங்கியது. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பதில்லை என்பதை பாலிசி போலவே அது பின்பற்றத் தொடங்கியது. அதேபோல எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆதாயமோ அதைச் செய்யவும் அது தவறியதில்லை. இதனால் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டு சேர்ந்து வந்தது.

4 திமுக- 3 அதிமுக

4 திமுக- 3 அதிமுக

1998ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதல் 2011 சட்டசபைத் தேர்தல் வரை மொத்தம் 4 முறை திமுகவுடனும், 3 முறை அதிமுகவுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது பாமக.

செல்வாக்கு போனதால் மீண்டும் ஜாதி..

செல்வாக்கு போனதால் மீண்டும் ஜாதி..

2009 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பெரும் தோல்வி கண்டது பாமக. ஒரு இடத்தில் கூட அது வெல்லவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு பெரும் தோல்வியைச் சந்தித்தது பாமக. இந்த தொடர் தோல்வியால் பாமகவின் செல்வாக்கு வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் பெரு்மளவில் சரிந்து போய் விட்டதாக ஆய்வுகளும், ஏடுகளும் எழுதத் தொடங்கின. இதைச் சரிக்கட்டவே மீண்டும் ஜாதியை டாக்டர் ராமதாஸ் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தர்மபுரி கலவரத்தை ஆதரிப்பது போல பேச்சு

தர்மபுரி கலவரத்தை ஆதரிப்பது போல பேச்சு

தர்மபுரியில் 3 தலித் கிராமங்களை சூறையாடிய மிகப் பெரிய ஜாதிக் கலவரத்தை ஆதரிப்பது போல பேசி வருகிறார் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக தலித்கள் குறித்து அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அதேபோல கலப்புத் திருமணங்களையும் அவர் கொச்சைப்படுத்துவது போல பேசி வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி

அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி

டாக்டர் ராமதாஸின் இந்தப் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸின் பேச்சுக்கு கருணாநிதி மிகக் காட்டமான பதிலளித்துள்ளார். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலித்களுக்கு எதிராக பிற ஜாதிகளைத் திரட்டும் ராமதாஸ்

தலித்களுக்கு எதிராக பிற ஜாதிகளைத் திரட்டும் ராமதாஸ்

தற்போது தலித்களுக்கு எதிராக பிற ஜாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் செய்ய முற்பட்டுள்ளார் ராமதாஸ். இதுவும் மக்களிடையே குறிப்பாக தலித் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வட மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் வெடிக்குமோ என்ற பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒதுக்கித் தள்ளப்படுமா பாமக?

ஒதுக்கித் தள்ளப்படுமா பாமக?

டாக்டர் ராமதாஸ் மீண்டும் தீவிரமான ஜாதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக இருந்தால் அவருடன் சேர திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் யோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 98ம் ஆண்டுக்கு முன்பிருந்த வெறும் ஜாதிக் கட்சி என்ற குறுகிய வளையத்துக்குள் பாமக இட்டுச் செல்லப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஜாதியைக் கையில் எடுத்துள்ள, தலித்களுக்கு எதிராக பேசி வரும் பாமகவை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுமா, ராமதாஸின் புதிய பாதை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+