Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்றைக்கு காதல் கடிதங்களை எழுதுவதும், ஆர்டின் வரைந்து ராக்கெட் விடுவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

காதல் பாடல்கள் மனப்பாடம்

காதல் பாடல்கள் மனப்பாடம்

திருக்குறளும், கொன்றை வேந்தனும் மனப்பாடம் செய்யவேண்டிய பள்ளி வயதில் இன்றைக்கு காதல் பாட்டுக்கள் சர்வ சாதாரணமாய் மாணவர்களின் காதுகளில் நுழைகின்றன. யம்மா யம்மா காதல் பொன்னம்மாவும், வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.... ஆகிய பாடல்களை இன்றைக்கு சர்வசாதாரணமாக சிறுவர்கள் பாடுவதை கேட்கலாம்.

காதலைப்பற்றி என்ன தெரியும்?

காதலைப்பற்றி என்ன தெரியும்?

திரைப்படங்களிலோ, டிவி சீரியல்களிலோ காதல் சீன்கள் வந்தால் அதை பார்க்கும் சிறுவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பருத்தி வீரனோ, மைனாவோ பிஞ்சு பருவத்து காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை மாணவர்கள் அதிகம் பார்க்கின்றனர் இதுவே பாதிப்பிற்கு உள்ளாகிறது.

கடிதம் கொடுத்த மாணவன்

கடிதம் கொடுத்த மாணவன்

திருப்பூரில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி. 75 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அந்த பள்ளியில் 3ம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான். "நீ ரொம்ப அழகா இருக்கே. பெரியவன் ஆனதுக்கு அப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று எழுதி அந்த மாணவியின் கையில் கொடுத்திருக்கிறான். அந்த மாணவி அதை வாங்க மறுக்கவே ராக்கெட் செய்து மாணவியின் மேல் அடித்துள்ளான். அதை எடுத்து நேராக வகுப்பு ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுக்கவே அடி பின்னிவிட்டார் ஆசிரியர்.

நீ இல்லைன்னா நான் இல்லை…

நீ இல்லைன்னா நான் இல்லை…

இதேபோல் கோவையில் பிரபல பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சிகரமானது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவி உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்கிறாள். இதனால் உடன் படித்த மாணவன் ஒருவன், இனிமேல் நீ லீவ் போடதே... நீ பள்ளிக்கு வராவிட்டால் என்னால் தாங்க முடியாது. உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று அவளிடம் பிதற்றியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறவே பிரச்சினை வெடித்துள்ளது.

ஹார்மோன் பிரச்சினையா?

ஹார்மோன் பிரச்சினையா?

மேற்சொன்ன சம்பவங்கள் சின்ன உதாரணம்தான். இன்றைக்கு தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. 80, 90 களில் படித்த மாணவர்கள் ப்ளஸ் டூவில்தான் காதல் பற்றி அதிகம் பேசினார்கள். பதின் பருவத்தில் மாணவர்கள் காதல் பற்றி பேசியதற்கு ஹார்மோன்களின் சுரப்பே காரணமாக இருந்திருக்கிறது.

குழந்தைகளின் அதீத வளர்ச்சி

குழந்தைகளின் அதீத வளர்ச்சி

அப்போதைய பெண் குழந்தைகள் 13 வயதில் தொடங்கி 16 வயதில்தான் பருவத்தை எட்டுவார்கள். ஆனால் இன்றைக்கோ 7 வயதில் தொடங்கி 11 வயதிற்குள்ளாகவே பெரும்பாலான பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டுவிடுகின்றனர். அதேபோல் ஆண் குழந்தைகளுக்கும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. இதுதான் பாலகர் பருவத்திலேயே காதலைப் பற்றிப் பேச காரணமாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்

எல்.கே.ஜி தொடங்கி 5ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் இதுபோன்ற அதீத வளர்ச்சியினால்தான். எனவே பெண் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கையில் மட்டுமல்லாது ஆசிரியர்களின் கையிலும் அதிகப் பொறுப்பு உள்ளது. ஆனால் ஆசிரியர்களே சில நேரங்களில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதுதான் வேதனை.

அச்சத்தில் பெற்றோர்கள்

அச்சத்தில் பெற்றோர்கள்

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே அனுப்பாத நிலை இருந்தது. இன்று எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்றைக்கும் கிராமப்புறங்களில் அச்சம் காரணமாக பெரும்பாலான பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி பருவத்திலேயே காதல் பற்றி பேசுவது தெரிந்தால் இனி மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது கூட கேள்விக்குறியாகிவிடும்.

மாணவர்களுக்கு ஆலோசனை

மாணவர்களுக்கு ஆலோசனை

இதுபோன்று பள்ளிப்பருவத்திலேயே காதல் பற்றி பேசும் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்பது ஆறாத வடுவாகப் பதிந்துவிடுவதோடு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே மாணவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவதோடு பாலியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அப்பொழுதுதான் காதல் பற்றியும், காமம் பற்றியும் அவர்களால் பிரித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம்

பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டும் மாணவர்களை உருவாக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும், மனித மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது பற்றியும் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிக்கல்வித்துறையில் அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் பெரும்பாலோனோரின் கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+