நாயை கடித்து தலைப்புச் செய்தியான ஆஸ்திரேலிய வாலிபர்
நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவில் போலீஸ் நாயுடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு கடித்து குதறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்தி நிறுவனங்களில் புதிதாக பணிக்கு சேரும் நிருபர்களுக்கு செய்தி ஆசிரியர் கூறும் அறிவுரைகளின் முதன்மையானது "மனிதனை நாய் கடித்தால் செய்தியல்ல, அதுவே நாயை மனிதன் கடித்தால் அது தலைப்புச் செய்தி" என்பதுதான். அப்படியொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது
ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இலவாரா பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அருகில் அழைத்தனர். போலீஸ் அருகே வந்தபோது அந்த நபரைப் பார்த்து போலீஸ் நாய் விடாமல் குரைத்தது. இதனால் அந்த நபர் கடும் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து ஆவேசமாக குரைத்த அந்த நாயின் மேல் பாய்ந்து அதனைக் கடித்தார். நாயும் வாலிபர் மீது கோபமாக பாய்ந்தது. இருவரும் கட்டிப் புரண்டதில் நாயும் அந்த வாலிபரின் தோளில் கடித்து குதறியது. நாயை கடித்த குற்றத்துக்காக அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications