கேரளா, ஆந்திராவுக்குப் பாயும் டெல்லி மின்சாரம் - தமிழகத்தை உதாசீனப்படுத்திய மத்திய அரசு!

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்திலிருந்து டெல்லிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தில், 231.17 மெகாவாட் மின்சாரத்தை டெல்லி அரசு திருப்பிக் கொடுத்தது. இந்த மின்சாரத்தை அப்படியே மின்பற்றாக்குறையால் அவதிப்படும் எங்களுக்குத் தர வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால் அதை நிராகரித்து விட்டது மத்திய அரசு. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது தமிழக அரசு. அங்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், தமிழகத்திற்கு டெல்லியின் மின்சாரத்தை வழங்க முடியாது. அதற்கான மின் கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறி விட்டது.
ஆனால் தற்போது இதே மின்சாரத்தை காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் பிரித்து அனுப்பி வருகிறார்களாம். ஜஜ்ஜார் மின் நிலையத்திலிருந்து மே 31ம் தேதி வரை கேரளாவுக்கு தினசரி 100 மெகாவாட் மினசாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி மின்சாரமும் தற்போது போய்க் கொண்டுள்ளதாம். ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறதாம்.
தமிழகத்திற்குத் தர முடியாது என்று நிராகரிக்கப்பட்ட மின்சாரத்தை தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மத்திய அரசு அனுப்பி வருவது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications