எதியூரப்பா ஆதரவு- கர்நாடகா அமைச்சர், எம்.பி. மீது பாஜக நடவடிக்கை

பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் எதியூரப்பா நாளை தமது கர்நாடக ஜனதா கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கிறார். ஹவேரியில் இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
எதியூரப்பா நாளை கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக கணிசமான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், எம்.எல்.சிக்களும் பாஜகவில் இருந்து விலகக் கூடிய நிலை இருக்கிறது.
இதனால் டெல்லியில் கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநில பாஜக தலைவர்கள், கட்சித் தலைவர் நிதின் கத்காரியுடன் ஆலோசனை நடத்தினர் .இந்த ஆலோசனை இன்று பிற்பகல்தான் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர், அமைச்சர் புட்டசாமி, எம்.பி. பசவராஜ் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கின்றனர் என்று அறிவித்தனர்.
பாரதிய ஜனதா தொடங்கியிருக்கும் இந்தக் களையெடுப்புப் பட்டியல் அனைவரும் எதிர்பார்ப்பது போல் மிக நீளமாக இருக்குமா? அல்லது எதியூரப்பாவின் கனவைத் தகர்ப்பது போல் இருக்கும? என்பதுதான் கர்நாடகாவில் ஹாட் டாப்பிக்!
-
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications