காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு- கர்நாடகாவில் தொடர் போராட்டம்-சட்டசபை முடக்கம்!
பெல்காம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. மண்டியா மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
சட்டசபை முடக்கம்
பெல்காமில் தற்போது நடைபெற்று வரும் கர்நாடகா சட்டசபைக் கூட்டத்தில் காவிரி நீர் திறப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காவிரி நீரைத் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் முதலில் அவையை சபாநாயகர் போபையா சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியபோதும் தர்ணா நீடித்ததால் சபையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கர்நாடகா தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்சிகள் வலியுறுத்தின.
மண்டியாவில் முழு அடைப்பு
மேலும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்திருக்கும் மண்டியா மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று மண்டியாவில் காவிரி பாதுகாப்புக் குழுத் தலைவர் மாதே கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டியா அருகே சாம்ராஜ் நகரிலும் தலைநகர் பெங்களூரிலும் இன்று போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றன.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்











Click it and Unblock the Notifications