பூரி விவகாரம்: சேலம் சிறையில் அதிரடி சோதனை… செல்போன், பணம் பறிமுதல்
சேலம்:சேலம் மத்திய சிறையில் இன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன்கள், பணம், கஞ்சா,பீடி, சிகரெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் உயரமான கட்டிடங்களில் ஏறிக் கொண்டு, பூரி தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சிறைக் கைதிகளிடம் செல்போன்கள் இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதாகவும் தகவல் தெரியவந்தது.
சேலம் மத்திய சிறையில் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தீவிர சோதனை நடத்த சிறைத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று வடக்கு உதவி கமிஷனர் தங்கத்துரை தலைமையில் அனைத்து உதவி கமிஷனர்கள், மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அதிகாலை 5-30 மணிக்கு மணிக்கு சிறைக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சிறைகைதிகளிடம் இருந்து 2 செல்போன, ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 6 சிம்கார்டு, 151 பீடி, 49 சிகரெட், 10 கிராம் கஞ்சா, 2 சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை, கோவை சிறைகளிலும் இதேபோன்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications