கர்நாடகா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது. ஆனால் கர்நாடகா அரசோ தமிழகத்துக்கு குறிப்பிடும்படியான அளவு நீரைத் திறந்துவிட மறுத்துவருகிறது, இதனிடையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுகிறோம் என மைய அரசு கூறியுள்ளது. ஒரு விதத்தில் இது தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் என்றாலும், அரசிதழில் வெளியிடுவதால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வந்துவிடப் போவதில்லை. எத்தனை அமைப்புகள் எத்தனை ஆணைகளைப் பிறப்பித்தாலும் தண்ணீர் தருவதில்லை என்பதில் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது.
மைய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தின் தலையில் சுமத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல. இத்தகைய சூழல் உருவானால் மத்திய அரசு மாநில அரசை முடக்கி வைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 365 மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் 365ன்கீழ் நடவடிக்கை எடுக்க எந்தவொரு தடையுமில்லை. எனவே மைய அரசு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications