நாஞ்சில் சம்பத்தை அதிமுகவுக்குக் கொண்டு வந்தது யார்?
சென்னை: மதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத்தை சிந்தாமல், சிதறாமல் அதிமுகவுக்குக் கொண்டு வர முக்கியக் காரணமாக இருந்தவர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என பேச்சு அடிபடுகிறது.

மதிமுகவில் நாஞ்சில்
ஈழ தமிழர் மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் முழு ஈடுபாடு கொண்டு போராடி வரும் இயக்கம் மதிமுக. அதன் பொதுச் செயலாளார் வைகோவிற்கு அடுத்த இடத்தில் மதிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். வைகோவைப் போலவே சம்பத்தின் பேச்சுக்கும் மதிமுகவில் தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

பிரிவு
இலங்கை அதிபர் ராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபோது அதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தமிழகத்தில் இருந்து தொண்டர்கள் பஸ் மூலம் சாஞ்சி சென்று நடுச்சாலையில் போராடினர். ஆனால் நாஞ்சில் சம்பத் இலக்கிய நிகழ்ச்சிக்காக துபாய் சென்றார். இதுதான் முதல் உறுத்தலாக அமைந்தது என்கிறார்கள்.

விலகல்
இதைத் தொடர்ந்து முன்னை விட வேகமாக சம்பத் ஓரம் கட்டப்பட ஆரம்பித்தார். மதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் ஏறக்குறைய விலகிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் திமுகவில் இணைப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்தார். மேலும், மதிமுகவில் இருந்து ராஜினாமா செய்யவும் மறுத்தார்.

அதிமுக தாவல்
இந்த நிலையில்தான் திடீரென, அவர் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுகவில் இணைந்த உடன் யாருக்கும் இவ்வளவு பெரிய மரியாதையை ஜெயலலிதா கொடுத்து இல்லை. ஆனால் சம்பத்திற்கு வழங்கினார்.

யார் காரணம்?
நாஞ்சில் சம்பத்தை அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் பதவியில் ஜெயலலிதா அமர்த்த பின்னணியில் சிலர் தீவிரமாக வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்தான், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மூலமாக சம்பத்திற்கு இந்த மரியாதையை செய்து கொடுத்ததாக சொல்கிறார்கள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications