உ.பி. முதல்வர் அகிலேஷ் விழாவில் கறுப்பு உடைக்கு தடை!
பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற உடையோ அல்லது ஜீன்ஸ் உடையோ அணிந்துவரக் கூடாது என்று பிஜ்னோர் மாவட்ட ஆட்சித் தலைவரான சரிகா மோகன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பிஜ்னோர் மாவட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக அகிலேஷ் யாதவ் இன்று செல்கிறார். மாணவிகள் தங்களது கல்வியைத் தொடர்வதற்காக தலா ரூ30 ஆயிரம் நிதி உதவி வழங்கும் விழாவும் இன்றைய நிகழ்ச்சியில் அடக்கம்.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய சரிகா மோகன், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கறுப்பு உடைகளை பெண்கள் அணிந்துவரக் கூடாது. துப்பட்டா கூட கறுப்பாக இருக்கக் கூடாது. ஜீன்ஸ் உடைகளையும் பெண்கள் அணியக் கூடாது. பெற்றோர்கள் கூட சாதாரண உடைகளைத்தான் அணிய வேண்டும். நகைகள் அணிந்து வரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இது பெண்களிடத்தில் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. பிஜ்னோர், ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியர்களே அதிகம். அகிலேஷின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டோரில் இஸ்லாமிய பெண்களும் அடக்கம். இவர்கள் அணிவது பெரும்பாலும் கறுப்பு நிற பர்தாதான். இப்படி ஒரு உத்தரவைப் போடுவது என்பதே அந்தப் பெண்களை அந்த நிகழ்ச்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கா? என்ற கேள்வியும் எழும்பியிருக்கிறது. மாவட்ட மாணவிகள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை இந்த உத்தரவு உருவாக்கியிருக்கிறது.
பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டப்பட்டதன் எதிரொலியாகத்தான் அகிலேஷை பாதுகாக்க இப்படி உத்தரவு போட்டாரம் மாவட்ட ஆட்சியர் சரிகா மோகன்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications