காவிரி: தமிழகம் - கர்நாடகா இடையேயான வாகனப் போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு
சத்தியமங்கலம்: காவிரி நதிநீர் விவகாரத்தால் தமிழக -கர்நாடகா இடையே 4-வது நாளாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலிருந்து திம்பம் மலை, மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை, நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதைகளின் வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன. ஆனால் ஓசூர் வழியிலான பாதையில் போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட்டு வந்தது,
தமிழக அரசுப் பேருந்துகளும் கர்நாடக அரசுப் பேருந்துகளும் இரு மாநில எல்லைகள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தமிழகப் பயணிகள் கர்நாடகப் பேருந்துகளிலும், அதேபோல, கர்நாடகப் பயணிகள் தமிழகப் பேருந்துகளிலும் ஏறிச் சென்றனர்.
இதனிடையே கர்நாடகாவில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் தணிந்ததாலும், சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் அமைதி நிலை திரும்புவதாலும், நேற்று மாலை 6 மணியளவில் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடிக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications