பொள்ளாச்சி: அரசுப் பேருந்தில் சிக்கி பள்ளி மாணவி பலி- டிரைவர் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பெள்ளாச்சியில் அரசு பேருந்தில் சிக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 14). இவர் பொள்ளாச்சி மாரியம்மாள் நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது சரண்யாவின் வழக்கம். அதேபோல் இன்று காலையிலும் சரண்யா தனது சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டார்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் சென்ற போது எதிரே நாகூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் சக்கரம் சரண்யாவின் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே சரண்யா உயிரிழந்தார்.
பள்ளி அருகிலேயே விபத்து நடந்ததால் உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். சரண்யாவின் பெற்றோர் அங்கு வந்து கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்ததும் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டார்.
விருதுநகரில் அரசுப் பேருந்து விபத்து-டிரைவர் பலி:
இந் நிலையில் விருதுநகரில் அரசுப் பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் பலியானார்.
சென்னையில் இருந்து கன்னியாக்குமரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து விருதுநகர் மாவட்டம் எட்டூருவட்டம் பகுதியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்த போது, பாலத்தின் சுவற்றில் மோதியது.
இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications