மாநகராட்சி கேன்டீனில் ஆவரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், மூலிகை கூட்டை ருசித்த அமைச்சர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி கேன்டீனில் தயார் செய்யப்பட்ட சாதம், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், துளசி மோர், பிரண்டை துவையல், மூலிகை கூட்டு ஆகியவற்றை அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மூலிகை உணவு கேன்டீன் திறக்கப்பட்டது. அங்கு மூலிகை டீ, சூப், மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு நலம் பயக்கும் மூலிகை உணவுகளை சாப்பிட பலர் அந்த கேன்டீனுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவதால் அவர்களுக்கு சிரமமின்றி உணவு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் அந்த கேன்டீனுக்கு வந்து விரும்பி சாப்பிடுகின்றனர். கேன்டீனில் வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.
இதற்கிடையே மூலிகைகளை கொல்லிமலையில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மூலிகை பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு மதிய உணவு வேளையில் மூலிகை சாப்பாடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு சாதம், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், துளசி மோர், பிரண்டை துவையல், மூலிகை கூட்டு பரிமாறப்பட்டது. அமைச்சர்கள் மூலிகை உணவை ருசித்து ரசித்து சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications