ராமர் படம் போட்ட சேலையை மார்பில் அணிவதா.. குஷ்புவைக் கண்டித்து போராட்டம்
சென்னை: ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தைப் போதித்த ராமர் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் இடம் பெற்ற சேலையை மார்பில் போர்த்திக் கொண்டு பொது விழாவுக்கு வருவதா என்று கூறி நடிகை குஷ்புவைக் கண்டித்து நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில்,நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில், வட சேரி சந்திப்பில் கண்டன போராட்டம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications