விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தடாலடியாக திமுகவுக்கு ஆதரவாக மாறினார் வடிவேலு. தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக போய் விஜயகாந்த்தை கடுமயாக தாக்கிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கு ஊரெங்கும் மகத்தான கூட்டமும் கூடியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் திமுக படு தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.
தேர்தலுக்குப் பின்னர் வடிவேலு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். அவரைத் தேடிப் படங்களும் வரவில்லை, அவரும் வாய்ப்பு தேடி போகவில்லை. இந்த நிலையி்ல தற்போது நிலைமை மோச்மாகியுள்ளது. அதாவது எந்த வடிவேலுவை நம்பி கடந்த தேர்தலை சந்தித்ததோ திமுக, அந்த வடிவேலு மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய விஜயகாந்த்தை நாடி இப்போது போக ஆரம்பித்திருக்கிறது. இது வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
இவங்களுக்காகத்தானே நாம் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்தோம், இவங்களுக்காகத்தானே பொழப்பைக் கூட அடமானம் வச்சு ரிஸ்க்கெல்லாம் எடுத்தோம். இப்போது விஜயகாந்த்தைப் போய் கூட்டணிக்காக பேச ஆரம்பித்து விட்டார்களே என்று வடிவேலு நொந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நேரில் போய் மனம் விட்டுப் பேசி பகிரங்கமாகவே அதிமுகவில் இணைந்து விடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் வடிவேலு.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications