டெல்லியில் பரிதாபம்- வீட்டு சுவர் இடிந்து 5 குழந்தைகள் பலி

தல்லுபுராவில் வீடு ஒன்றின் முன்பு நேற்று காலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது 17 அடி உயரம் கொண்ட வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் அமித், கஞ்சன், பேபி, ஆதித்யா, அன்கித் ஆகிய 5 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இக்குழந்தைகள் அனைவரு 2 வயது முதல் 6 வயது வரையிலானவர்கள். சரஸ்வதி என்ற 4 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதே டெல்லியின் கிழக்குப் பகுதியில் கங்கா விஹார் குடிசைப் பகுதியில் கடந்த அக்டோபரில் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர் எனது குறிபிடத்தக்கது.












Click it and Unblock the Notifications