12.12.12ல் 12 விரல்களுடன் பிறந்த ஆண் குழந்தை
திருவனந்தபுரம்: அதிசய நாளான 12.12.12ல் கேரளாவில் 12 விரல்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
12.12.12 அதிசய நாள், விசேஷ நாள் என்று கருதப்பட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகளில் பலர் நேற்று திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பிணிகள் சிசேரியன் செய்தாவது பிள்ளையை இந்த அதிசய நாளில் பெற்று கொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறும் செய்தனர்.
இந்நிலையில் நேற்று கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 12 விரல்களுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷானு. அவரது மனைவி திவ்யா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வரும் 18ம் தேதி பிரசவம் நடக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராமல் திவ்யாவுக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 12 விரல்களுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது.
12.12.12ல் 12 விரல்களுடன் பிறந்த குழந்தையை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டனர்.












Click it and Unblock the Notifications