குஜராத்: தேர்தல் பிரச்சாரத்தில் மோடியுடன் கை கோர்த்த இர்பான் பதான் - சல்மான் குர்ஷித் காட்டம்

குஜராத் மாநில சட்டசபைக்கான 2-வது கட்ட வாக்குப் பதிவு வதேதரா, பஞ்சமால், ஆனந்த் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 17-ந் தேதி நடைபெற இருக்கிறது.
2-ம் கட்ட தேர்தல் நடைபெறக் கூடிய வதோதராவில் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மோடியின் மேடையில் அவரது இருக்கைக்கு பின் அமர்ந்திருந்தவர்தான் இர்பான் பதான்.
சிறுபான்மையினர் வாக்குகளைக் கவரும் வகையில்தான் இர்பான் பதானை மோடி வளைத்துப் போட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி சாடியிருக்கிறது. இர்பான் பதான் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிடுவோம் என்று கவலைப்படுகிறார் மோடி. பூனைக்குட்டி இப்போது வெளியே வந்திருக்கிறது. மோடியுடன் இர்பான் பதான் இணைந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் அவர்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சிறுபான்மை சமூகத்தவர் எவருமே வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications