21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெ தலைமையில் பிரம்மாண்ட விழா

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2308 பேருக்கும் இன்று பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவில் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 21 ஆயிரம் ஆசிரியர்களில் 36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பணி நியமன ஆணையை வழங்குகிறார்கள். இதனைத்தொடர்ந்து கல்வி திட்டங்களை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.
இந்த விழாவிற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் வரும் ஆசிரியர்கள் 38 பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குளியல் அறை, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழக கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications