மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்... ஆசிரியர்களுக்கு ஜெ. அறிவுரை
சென்னை: மாணவ- மாணவியர்கள் இடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமையை மாணவர்கள் இடத்திலே உருவாக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசிரியர் பணி என்பது அறப்பணி, தன்னலமற்ற பணி, சீரிய பணி. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது மட்டுமல்ல, ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ - மாணவியர் இடையே எடுத்துச் செல்லும் பணி.
வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையா கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும் தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார்.
ஆனால் தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை ஆசிரியர் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமாக பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி.
இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்களெல்லாம் திறம்பட செயல்பட்ட வேண்டும். எந்த சாவல்களையும் எதிர்கொள்ளும் திறமையை மாணவர்கள் இடத்திலே உருவாக்க வேண்டும். மாணவ- மாணவியர் இடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா அறிவுரை கூறினார்.
முன்னதாக அவர், 92 லட்சம் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, வண்ணசீருடை மற்றும் கிரையான்கள், பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணி, இலவச சைக்கிள், பஸ்பாஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், குடும்பத்தில் தலைவரை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications