காவிரி நீர் கோரி தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்
திருச்சி: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தி திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் போராட்டம் நடைபெற்றது.
காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. தற்போது சம்பா சாகுபடியும் கருகி வருகிறது. காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கர்நாடகா அலட்சியம் காட்டி வருகிறது. தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது.
இதனிடையே காவிரி டெல்டா விசாயிகள் 6பேர் தற்கொலைசெய்து கொள்ளவும் நேரிட்டது. இந்நிலையில் பாரதிய கியான் விகாஸ் சங்கத்தினர் திருச்சியில் காவிரி நீரைக் கோரி ரயில் மறியல் போராட்டத்தையும் அரை நிர்வாணப் போராட்டடத்தையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் காவிரி நீர் கோரி நாகப்பட்டினத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
மேலும் வரும் 21-ந் தேதியன்று காவிரி டெல்டா பகுதிகளில் பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications