மதுரை ஆதினமடம் இந்து சமய அறநிலையத்துறை வசமாகுமா?: நாளை தீர்ப்பு
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை நீக்கிவிட்டு மடத்தை இந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு மதுரை மாவட்ட கோர்ட்டில் சனிக்கிழமை வெளியாக உள்ளது.
மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைந்ததில் இருந்தே சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. திடீரென்று ‘மதுரை ஆதினம் அறக்கட்டளை' தொடங்கப்பட்ட உடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அறநிலையத்துறை ஆணையர் தனபால் தாக்கல் செய்த அந்த மனுவில், ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில்தான் ‘‘மதுரை ஆதீனம் அறக்கட்டளை'' தொடங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மடத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
ஆதினம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதீனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு, இந்து அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பு வக்கீல்களும், அரசு வக்கீல் தமிழ்ச்செல்வமும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துக்கூறினர். அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதுரை ஆதீனத்தை நீக்கிவிட்டு மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி கோரி இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சனிக்கிழமை ஒத்திவைத்தார்.
அறக்கட்டளை கலைப்பு
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் உருவாக்கிய மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது. அதனை மதுரை தெற்கு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அறக்கட்டளை கலைக்கப்பட்ட நிலையில் அந்த பதிவை ரத்து செய்யும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவில் சார் பதிவாளரும், நித்தியானந்தாவும் மட்டும் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு இருந்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவில் இந்து அறநிலையத்துறையையும் ஒரு எதிர்தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அரசு வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை சனிக்கிழமை ஒத்திவைத்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications