வெகுவிமர்சையாக பிறந்தநாள் கொண்டாடுவேன்: மு.க. அழகிரி

மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த துரைதயாநிதி மு.க. அழகிரியை எம்.பி. அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, என்னை அவமானப்படுத்த, அசிங்கப்படுத்தவே அதிமுக அரசு பொய் வழக்கை என் மகன் மீது போட்டிருக்கிறது. என் மகன் எந்த முறைகேட்டையும் செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது பேசலாம்.
மத்திய அமைச்சராக நான் இருந்தாலும் என்னிடம் கொடுக்கப்படும் மனுக்களை பரிந்துரைக்காக ஆட்சியர் அலுவலகத்திலோ மற்ற அரசு அதிகாரிகளிடமோ கொடுத்தால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதனால்தான் மக்களிடம் மனுக்களையே பெறுவதில்லை.
மதுரை மாவட்ட ஆட்சியரைப் பொறுத்தவரையில் முதல்வரை முதலாளியாகத்தான் பார்க்கிறார். என் தொகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்கோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கோ அழைக்கப்படுவதில்லை. காவல்துறை அதிகாரிகள் எனக்கு எதிராகவே இருக்கின்றனர்.
என் முயற்சியில் மேலூர் சிப்காட் தொழில்ற்பயிற்சி பள்ளி உருவாக்கப்பட்டது. அது சிறப்பாகவும் செயல்படுகிறது. ஆனால் அதிமுக அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை.
இந்த ஆண்டு என் பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். என் திருமண நாளின் போதும், என் மகனின் திருமண நாளின் போதும் அவன் வீட்டில் இல்லை. அது ஒரு தந்தை என்ற அடிப்படையில் வருத்தாமாகத்தான் இருந்தது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
