அடித்த ஆந்திர போலீஸ்- நள்ளிரவில் போராட்டம் நடத்திய ரயில் டிக்கெட் பரிசோதகர்கள்
திண்டுக்கல்: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ஆந்திர போலீசாரைக் கைது செய்யக் கோரி நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திருநெல்வேலியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. எஸ்.8 பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் அண்ணாமலை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது டிக்கெட் எடுக்காத 3 பேர், தாங்கள் ஆந்திர மாநில போலீசார் என்று கூறியிருக்கின்றனர். அவர்களிடம் அடையாள அட்டையை பரிசோதகர் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் பரிசோதகரை ஆந்திர போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு இரவு 10.50 மணிக்கு ரயில் வந்தடைந்தது. ஆந்திர போலீசார் என்று கூறிய 3 இளைஞர்களும் திண்டுக்கல் ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆந்திர போலீசாரை கைது செய்யக் கோரி டிக்கெட் பரிசோதகர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்த டிக்கெட் பரிசோதகர்களும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இப்போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதனால் சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்பட்டன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications