கேரளாவுக்கு டூருக்குப் போன இடத்தில் சில்மிஷம்... 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார்
சிவகங்கை: கேரளாவுக்கு பள்ளிச் சுற்றுலா போன இடத்தில் தங்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து போலீஸார் இதுகுறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 2 ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் கடந்த கல்வி ஆண்டில் கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்து சென்றனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக இருந்த வேதமாணிக்கம் என்பவர் ஒரு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதே பள்ளியில் விவசாய ஆசிரியராக பணிபுரியும் சீனிராஜன் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பால்ராஜ் குழுவினருடன் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார்களில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதையடுத்து இரண்டு ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications