அமெரிக்கா: தாயை முதலில் சுட்டுக்கொன்று பிறகு பள்ளிக் குழந்தைகளை சுட்ட கொலைவெறியன்

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
பலியானவர்களில் 12 சிறுமிகள் மற்றும் 8 சிறுவன்கள் முதலாம் வகுப்பில் படித்தவர்கள். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியூடவுனுக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
குழந்தைகளை காக்கும் முயற்சியில் பள்ளியின் தலைமையாசிரியையும், மனோதத்துவ நிபுணரும் பலியாகினர். ஒரு ஆசிரியை மாணவர்களை ஜன்னல் வழியாக தப்பித்து ஓட வைத்துள்ளார். மேலும் ஒரு ஆசிரியை துப்பாக்கிச் சூடு முடியும் வரை மாணவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பலியானார். அவரின் பெயர் ஆடம் லான்சா(20). நியூடவுனில் வளர்ந்த அவரின் மாமா நியூ ஹாம்ப்ஷையரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். லான்சாவின் தாய் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்று கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் லான்சா ஏன் இப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பதும் தெரியவில்லை என்றனர்.
லான்சா .223 புஷ்மாஸ்டர் செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கி, 10 எம்எம் கிளாக் மற்றும் 9 எம்எம் சிக் சாயர் செமி ஆட்டமேட்டிக் ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சுட்டதில் சிலரின் உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளது. லான்சா சுட்டதில் முதலில் அவரது தாய் நான்சி தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை லான்சா தனது வீட்டில் தனது தாயின் முகத்தில் சுட்டு அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது தாயின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறி அந்த பள்ளிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications