இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு... ஏடிஎம் மையங்களை மூடியது பனி

Subscribe to Oneindia Tamil

Himachal
ஸ்ரீநகர்: இமாச்சல் பிரதேசத்தில் கொட்டிவரும் பனியால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எடிஎம் மையங்களில் மூடியுள்ள பனியால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது குளிர். டெல்லி, இமாச்சலப் பிரதேசங்களில் கொட்டிவரும் பனியால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகனப்போக்குவரத்து தடைபட்டுள்ளது. வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள டிடிஎச் டிஸ் ஆன்டெனாக்களின் மேல் பனி சூழ்ந்துள்ளதால் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைபட்டுள்ளது.

சாலையோரங்களில் ஏடிஎம் மையங்கள் பனியால் சூழப்பட்டிருப்பதால் இயந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வாட்டும் உறைபனி

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள லாஹால்பள்ளத்தாக்குப் பகுதியில் பனி மழை கொட்டிவருவதால் செல்போன்கள், கைக்கடிகாரங்கள் செயல்இழந்துவிட்டன. இன்னும் 5 மாதத்திற்கு இதே நிலை நீடிக்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கெய்லாங் பகுதியில் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை நீடிக்கிறது.

மின்னணு இயந்திரங்கள் பாதிப்பு

இதனிடையே கடந்த நவம்பர் 4ம் தேதி இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நிலையும் அச்சுறுத்துத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் லாகூல் நகரில் இருந்து குல்லு நகருக்கு விரைவில் எடுத்துச்செல்ல உள்ளனர். மணாலி - லே நெடுஞ்சாலை பனிப்பொழிவினால் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பனி மூட்டம்

இதனிடையே டெல்லியில் வரும் 20-ந்தேதி முதல் சுமார் ஒரு மாதத்துக்கு பனிப் பொழிவு வரலாறு காணாத அளவுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழிவுடன் புகை மூட்டமும் அதிகரிக்கும் என்றும் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

விமானசேவை பாதிக்கும்

கடும் பனிப்பொழிவு மற்றும் புகை மூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட எல்லா போக்குவரத்தும் தினமும் காலை நேரத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் டெல்லி வரும் விமானங்கள் தரை இறங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் குளிர்

வடமாநிலங்களை மட்டுமல்லாது கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் காலை 10 மணிவரை சூரியனை காணமுடிவதில்லை. பகல்நேரத்தில் லேசான வெயிலுடன் குளிர் காற்றும் வீசுவதால் ஏராளமானோர் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருள் சூழ்ந்த வனப்பகுதி

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஈரோடு, கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, பவானிசாகர், பு.புளியம்பட்டி, அந்தியூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள நகர பகுதியில் அதிகாலை கொட்டும் பனி காலை 8.30 மணி வரை நீடிக்கிறது. இதேபோல் அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதி மேலும் கடம்பூர் வனப் பகுதிகளில் இரவு மற்றும் காலை முழுவதும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மாலை 4 மணிக்கே வனப்பகுதிகளில் குளிர தொடங்கி சில இடங்களில் சாரல் மழையும் பெய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+