நண்பரை அடித்து வெளியே வீசி விட்டு ஓடும் பஸ்ஸில் மாணவி பலாத்காரம்... டெல்லியில் பயங்கரம்!

தலைநகர் டெல்லியில் பெண்களின் கற்புக்கும், உயிருக்கும் சற்றும் பாதுகாப்பு இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து அங்கு பாலியல் பலாத்காரங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் நேற்று இரவு ஓடும் பஸ்சில், 23 வயது இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர். அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில், இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம். பாலம் செல்வதற்காக கிளம்பினோம். அந்தப் பேருந்து கிளம்பி பத்து நிமிடம் ஆன நிலையில், பஸ்சில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். இதை நான் ஆட்சேபித்தேன். இதையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர். பின்னர் என்னை தரதரவென இழுத்து பஸ்சை விட்டு கீழே தள்ளி விட்டனர்.
பின்னர் அந்தப் பெண்ணை பஸ்சின் கேபின் பகுதிக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து 5 பேரும் பலாத்காரம் செய்து நாசப்படுத்தினர். பின்னர் அவரை அருகே உள்ள ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டனர் என்றார்.
சம்பந்தப்பட்ட பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருபவர். அவருடன் வந்த நபர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். படம் பார்த்து விட்டு இருவரும் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துணிகர சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications