வவுனியா செல்கிறார் இந்திய ராணுவ தளபதி! விடுதலைப் புலிகளையும் சந்திக்கிறார்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் நாளை மறுநாள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
இந்திய ராணுவ தளபதி பிக்ரம்சிங் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கைக்கு புதன்கிழமையன்று செல்கிறது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோரை இக்குழு சந்திக்கிறது.
பின்னர் வவுனியா செல்லும் இந்திய குழு அங்கு இலங்கை ராணுவ தலைமையகத்தை பார்வையிடுகிறது. மேலும் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளையும் பிக்ரம் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தியத்தாலவ, அனுராதபுரம், கண்டி ஆகிய இடங்களுக்கும் இந்திய ராணுவ அதிகாரிகள் குழு செல்லத் திட்டமிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications