கூடுதல் அபராதம் வசூலி்த்ததைக் கேட்ட அதிகாரிகளை தாக்கிய டிக்கெட் செக்கர் சஸ்பெண்ட்
சென்னை: ரயில் பயணிகளிடம் அதிக தொகை வசூலித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விஜிலென்ஸ் அதிகாரிகளை அடித்து உதைத்த ரயில் டிக்கெட் பரிசோதகர் கருணாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறக்கும் படை பரிசோதகராக இருப்பவர் கருணாகரன்(48). அவர் எந்த ரயிலிலும் ஏறி பயணிகளிடம் பரிசோதனை செய்யலாம். இந்த நிலையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை பிடிக்கும் போது அவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகைக்கு பில் கொடுப்பதில்லை என்றும், மொபைல் போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கருணாகரன் பறித்துச் செல்வதாகவும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து கருணாகரனின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் விஜிலென்ஸ் அதிகாரிகள் கவுதமன், ஸ்ரீதரன், கிரிதர், ஹரிசந்திரன் ஆகியோர் கருணாகரனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கருணாகரன் வசூலித்த அபராதத் தொகையில் 4,000 ரூபாய் அதிகம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடுதல் பணம் குறித்து விளக்கம் கேட்டு சென்ட்ரலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் அறையில் கருணாகரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் விஜிலென்ஸ் அதிகாரிகள் நான்கு பேரையும் தாக்கினார். இதில் கவுதமன் உதடு கிழிந்து, ரத்தம் கொட்டியது. மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த நான்கு பேரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கருணாகரன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications