ஜெ. பிரதமரானால் இந்தியா வல்லரசாகுமாம்!... தமிழக அமைச்சர்கள் பேச்சு!
சேலம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை மாநிலம் தோறும் அதிமுகவினர் நடத்திவருகின்றனர். சேலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேசியதாவது:
காவிரி பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கவும், நாடு வல்லரசாகவும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார் அவர். இதேபோல் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.
தமிழகத்தில் எண்ணற்ற விலையில்லாப் பொருள்களை முதல்வர் வழங்கி வருகிறார். ஆனால், 90 சதவீத அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் இந்த பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவதாக கூறுவதில்லை.எனவே, இதுபோன்ற விழாக்களில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார் அமைச்சர் கே.பி.முனுசாமி.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினையை தீர்ப்பது பற்றி எந்த அமைச்சரும் விவாதிப்பதாக தெரியவில்லை. அதை விடுத்து இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பது பற்றியும், ஜெயலலிதாவை பிரதமராக்குவது பற்றியும் பேசி வருகின்றனர் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications