இனி இஷ்டத்திற்கு ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவிக்க முடியாது!

இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரும் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிஸ் நாடு கறுப்பு பணம் பதுக்குவோரின் புகலிடமாக உள்ளது என உலக நாடுகள் பலவும் கூறி வருகின்றன.
இந்த கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசும் அறிவித்தது. மேலும் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள், இப்படி கறுப்பு பணத்தை பதுக்குவதற்கான புகலிடமாக சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குவதை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் புது சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு மசோதா ஒன்றை புத்தாண்டில் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசின் சார்பில் முடிவு எடுக்கிற உயர் அமைப்பான சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில், அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்ன் நகரில் நடந்த பெடரல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சுவிஸ் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஒடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகள், மூலமான பணம் முதலீடு செய்யப்படாமல் இருக்க, இரு நாடுகளுக்கும் இடையே, வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் முதலீடு செய்யவரும் வாடிக்கையாளர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு பெற வேண்டும்.இது தொடர்பாக, மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். இதன் பின் புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே புத்தாண்டில் கறுப்பு பண பதுக்கலுக்கு எதிரான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்து விட்டால், வங்கிகள் மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் கணக்கில் வராத யாருடைய பணத்தையும் எந்த நாட்டிலிருந்தும் பெற முடியாத நிலை உருவாகி விடும். அது கறுப்பு பண முதலைகளுக்கு பெருத்த அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications