டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு… ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி

இன்று காலை மாநிலங்களவை தொடங்கிய போது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவைத் தலைவர் அன்சாரி இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு கேள்வி நேரத்தை நடத்த தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. எனவே அவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து அவை மீண்டும் தொடங்கியதும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கட்சி சார உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் தொடரும் பாலியல் சம்பவங்களுக்கு மாநகர காவல்துறை ஆணையரே காரணம் என்றும், அவரே ஒரு கிரிமினல் என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார். பின்னர் பேசிய உறுப்பினர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் மக்களவையிலும் எதிரொலித்தது. மக்களவையில் பேசிய உறுப்பினர்கள் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் ஞாயிறு இரவு ஓடும் பேருந்தில், 23 வயது இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றனர். அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications