இங்கிலாந்து டாக்டரை மருமகளாக ஏற்க மறுத்த பெற்றோர்: பெங்களூர் டாக்டர் தற்கொலை
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் மது ஹொன்னையா தற்கொலை செய்து கொண்டார்.
இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீயில் இருக்கும் சிங்கிள்டன் மருத்துவமனையில் அனஸ்தீசியா கொடுக்கும் மருத்துவராக இருந்தவர் பெங்களூரைச் சேர்ந்த் மது ஹொன்னையா(33). அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் எம்மா ரைட்டன் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு முதல் காதலித்தார். இந்நிலையில் எம்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். அப்போதும் அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கே வந்த எம்மா மதுவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2010ம் ஆண்டில் அவர்கள் பெற்றோருக்கு தெரிவிக்காமல் நிச்சயம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற மதுவின் பெற்றோர் தங்கள் மகனின் காதல் பற்றி அறிந்து கொண்டனர். அவர்கள் தங்கள் சாதியைச் சேர்ந்த அல்லது இந்தியாவில் வளர்ந்த பெண்ணைத் தான் மணக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து மது இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று எம்மாவிடம் தெரிவிக்க அவர் மறுத்திவிட்டார். பின்னர் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுவும், எம்மாவும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு 2011ம் ஆண்டு ஜனவரியில் மது ஸ்வான்சீ வந்துவிட்டார். ஆனால் அவரால் எம்மாவை மறக்க முடியவில்லை.
இந்நிலையில் மதுவை போனில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே எம்மா அவரைப் பார்க்க ஸ்வான்சீ வந்துள்ளார். ஆனால் அவரால் மதுவை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் சிங்கிள்டன் மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் மதுவின் வீட்டுக்கு சென்றபோது கதவு பூட்டப்படாமல் இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் மது தற்கொலை செய்து பிணமாகக் கிடந்தார்.
அவர் இறக்கும் முன்பு 8 பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications