உலகின் வயதான பெண்ணாக கின்னஸில் இடம்பெற்ற 2 வாரத்திற்குள் இறந்த டினா
வாஷிங்டன்: உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து 2 வாரம் கூட ஆகாத நிலையில் டினா மான்பிரட்னி காலமானார். அவருக்கு வயது 115.
உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் ஜார்ஜியாவைச் சேர்ந்த பெஸி கூப்பர். அவர் இந்த மாத துவக்கத்தில் தனது 116வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து ஐயோவாவைச் சேர்ந்த 115 வயதான டினா மான்பிரெட்னி உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் ஐயோவாவில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று இறந்துவிட்டார் என்று அவரது குடும்ப வட்டாரம் தெரிவித்தது. அவர் இறந்ததை டினாவின் கொள்ளு பேத்தி லோரி லோக்லி உறுதிபடுத்தினார். ஆனால் டினா எப்படி இறந்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
டினா கடந்த 1897ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி இத்தாலியில் பிறந்தார். பின்னர் 1920ம் ஆண்டு தனது கணவர் ரிக்கார்டோவுடன் ஐயோவாவுக்கு வந்து செட்டில் ஆனார். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications