தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரின் கருணை மனு டிஸ்மிஸ்- 13 பென்டிங்
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 24 பேரின் கருணை மனுக்கள் அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப்பின் கருணை மனுவும் அடக்கம். கசாப் கடந்த மாதம் 21-ந் தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
இன்னும் 13 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட அப்சல் குரு மற்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனா ஆகியோரது கருணை மனுக்கள் அடக்கம் என்றார் அவர்.
மேலும் அரசியல் சாசனப் பிரிவு 72-ன் கீழ் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications