மாணவி பலாத்காரத்திற்கு கண்டனம்: டெல்லியில் பா.ஜ.க பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவி ஒருவர், முனிர்கா என்ற இடத்தில் இருந்து துவாரகா என்ற இடத்திற்கு அவரது நண்பருடன் பயணித்த போது பேருந்தில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி எரிந்தனர். அவருடன் பயணித்தவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது சப்தர்ஜங் மருத்துனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெண் எம்.பிக்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
பலாத்கார சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை சோனியா கேட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி தான் மத்தியில் இருக்கிறது. நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் தான் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவரே ஆட்சியில் அங்கம் வகிப்பவர்களை கோரிக்கை விடுத்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் எம்.பிக்கள் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பதாகைகளை தங்களின் கைகளில் தாங்கியிருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications