சவீதா மரணம் எதிரொலி: கருக்கலைப்புக்கு அயர்லாந்து சட்ட அங்கீகாரம்
லண்டன்: இந்திய பெண் மருத்துவர் சவீதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்துகொள்வதை அனுமதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என அயர்லந்து அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் அயர்லந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா என்ற கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ஆனால் கருக்கலைப்பு செய்ய அயர்லாந்து சட்டம் அனுமதிக்காததை காரணம் காட்டி அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் ரத்தத்தில் நோய்தொற்று ஏற்பட்டு அக்டோபர் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
சவீதா மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்து முழுவதும் கருக்கலைப்புக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது. கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தற்போது அரசு பணிந்துள்ளது.
இதுபற்றி பேசிய அயர்லாந்து பிரதமர் எண்டா கென்னி, 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். பின்னர் படிப்படியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அயர்லந்து அரசின் புதிய சட்டப்படி, கர்ப்பிணியின் உடல்நிலை இக்கட்டான நிலையில் இருந்தால் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதை முறைப்படுத்தும் வகையில், மேலும் பல விதிமுறைகளை இயற்றவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications