அண்ணே நாளைக்கு உலகம் அழியப்போகுது….இன்னிக்கே பணத்தை பிடிங்க… சந்தோசமா இருங்க!
தர்மபுரி: டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது.
சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த கரும்பு வியாபாரி குழந்தைதம்பி (55), 21ம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்றும் அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறி நேற்று வங்கியில் இருந்து 1 லட்சம் பணத்தை எடுத்து வந்து அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.
நாளையோடு உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறி பணத்தை கொடுத்தாராம். ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்' என்றும் வேறு கூறியுள்ளார் அந்த நபர்.
இந்த தகவல் பரவியதையடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை பார்க்க சென்றனர். அவர் கையில் இருந்து பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு எங்கேயோ எஸ்கேப் ஆகிவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications