டெல்லி பலாத்கார வழக்கு: பஸ் கிளீனர் உள்பட 2 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவியை சீரழித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை சீரழித்தது. இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியது. இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம்மில் பணிபுரியும் வினய் சர்மா மற்றும் பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோரை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பேருந்தின் கிளீனர் ராஜு மற்றும் இன்னொரு நபரை உத்தர பிரதேச மாநிலம் பதௌன் மற்றும் பரேலி பகுதியில் கைது செய்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்களைப் பிடிக்க போலீசார் ஹரியானா, பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் நள்ளிரவில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது தான் அந்த இருவரும் சிக்கினர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவிருக்கின்றனர். 5 போலீஸ் சோதனைச் சாவடிகளைத் தாண்டி அந்த பேருந்து சென்றபோது போலீசார் ஏன் அதை தடுத்து நிறுத்தவில்லை என்றும் இன்று விளக்கம் அளிக்க உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications