பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் உறவினர் மீது காவல்நிலையத்தில் புகார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், புஞ்சைத்தலையூர் கிராமம், காத்தசாமி பாளையத்தைச்சேர்ந்த சின்னப்ப கவுண்டர் மகன் பால்சாமி என்பவருடைய நிலத்தில் அத்துமீறி நுழைந்து மரங்களை சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் மூலனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
மூலனூர் ஒன்றியத்திற்குற்பட்டபுஞ்சைத்தலையூர் கிராமத்தில் பழைய க.ச.எண் 324-2 மற்றும் புதிய ரீ சர்வே எண் 377-2பி யில் உள்ள பு.ஏ.0.83 உள்ள நிலத்தை கடந்த 12.11.2004 ஆம் ஆண்டு கிரையம் வாங்கி உள்ளேன்.
இந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறேன்.இந்த நிலத்தின் அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்தக்குளம் தற்போது மராமத்து பணி நடந்து வருகிறது. அந்த குளத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் உதவியாளர் வேலுச்சாமி என்பவர் காண்டிராக்ட் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10.12.2012 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சரவணன் மற்றும் ஒப்பந்தக்காரர் வேலுச்சாமி ஆகியோர் பால்சாமி நிலத்தில் அத்துமீறி நுழைந்து பல லட்சம்மதிப்புள்ள 15 பெரிய வேலான் மரங்களையும், 3 பனைமரங்களையும் , 5பெரிய வேப்ப மரங்களையும் கிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு அழித்து உள்ளனர். மேலும் அந்த இடத்தின் அருகாமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இடம் உள்ளது. அதற்கு பாதை வேண்டும் என்ற நோக்கில் உள்நோக்கத்தோடு மரங்களை அழித்துள்ளனர். அப்போது பால்சாமி தாயார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது உதவிப்பொறியாளர் சரவணன். வேலுச்சாமி ஆகியோர் நா கூசாத வார்த்தைகளால் அவமானப்படுத்திவிட்டு சென்றுள்னர். அதன் பின்னர் பால்சாமி மூலனூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அழிக்கப்பட்ட மரங்களின் மதிப்பு 1லட்சம் என காவல்நிலையத்தில் உள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பால்சாமி தமிழக முதல்வர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உயர்அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சரின் பெயரை கூறி ஆட்டம்போடும் கைத்தடிகளால் அமைச்சர் பதவிக்கு ஆப்பு விழும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் சம்பந்தமாக எஸ்.டி.ஓ.நரேந்திரனிடம் கேட்டபோது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக குளம் பணி நடக்கும்போது மரங்களை அழித்தது உண்மைதான். அதன் சம்பந்தமாக மனு விசாரணையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications