பாண்டியன் எக்ஸ்பிரசில் பைக்குள் பச்சிளம் குழந்தை!
மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வேசன் பெட்டியில் பைக்குள் பச்சிளம் குழந்தை இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை மீட்ட போலீசார் அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்பட்டது. சோழவந்தான் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த ரயிலின் எஸ்,13 முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அந்த பைக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசாரிடம் பயணிகள் தெரிவித்தனர். அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்தப் பையை எடுத்து பிரித்துப் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குளிர் காற்றால் நடுங்கி அழுது கொண்டிருந்தது. உடனே பெட்டியில் இருந்த பயணிகள் அந்தக் குழந்தையை, துணியால் சுற்றி முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. போலீசார், அந்த குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்டு, ரயில் பெட்டியில் பரிதவித்த நிலையில் இருந்த அந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இந்தக் குழந்தையை சேர்ப்பது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications