15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் ...சென்னை அருகே வாலிபர் கைது
சென்னை: சென்னை அருகே பட்டாபிராமில் டுடோரியல் சென்ற மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் கட்டாய தாலி கட்டி, பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்தவர் முருகன் மகள் லீலா வயது 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் முகப்பேரில் உள்ள ஒரு டுடோரியலில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி காலை டுடோரியலுக்கு சென்ற லீலா வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து லீலாவின் பெற்றோர் உறவினர் வீடுகளிலும், தோழியின் வீட்டிலும் தேடி வந்தனர். எங்கு தேடியும் லீலாவை கண்டுபிடிக்க முடியாத பெற்றோர்கள், பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பட்டாபிராம் சோராஞ்சேரி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் சரவணன் (20) லீலாவை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் தேடிய போலீசார், சனிக்கிழமை மாலை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை பிடித்தனர். அவரிடம் இருந்து லீலாவை மீட்டனர். இருவரையும் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது லீலாவை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று கட்டாயதாலி கட்டி பலாத்காரம் செய்ததாக சரவணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து லீலாவை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர். சரவணனை கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications